வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

573பார்த்தது
வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா வரும் மே மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இதை முன்னிட்டு, வரும் மே 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.