ஓச்சேரி அருகே தலை நசுங்கிய நிலையில் ஆண் பிணம் மீட்பு

81பார்த்தது
ஓச்சேரி அருகே தலை நசுங்கிய நிலையில் ஆண் பிணம் மீட்பு
காவேரிப்பாக்கம் அடுத்த பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓச்சேரி மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடல் மற்றும் தலை நசுங்கிய நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். 

இது குறித்து ஓச்சேரி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) நவீன், அவளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து அவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி