ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 குறித்த முக்கிய தினங்களை அறிவித்துள்ளார். வீடுவீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி இன்று நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும். பெயர்களைச் சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.