ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

81பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாபெரும் நிகழ்ச்சி கழிவு சேகரிப்பு மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் தடைகள் குறித்தும் மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை மக்களிடமும் மாணவர்-மாணவிகளிடமும் கொண்டு சேர்ப்பது குறித்து ஒவ்வொரு மாதம் 4-வது சனிக்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ள உள்ளன. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து ஒவ்வொரு 3 மாதத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இதனையொட்டி, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமைப்படை மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் இதில் களம் இறங்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி