ஓச்சேரி: ஆட்டோவின் மீது தனியார் பள்ளி பேருந்து மோதி விபத்து!

3பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் உத்திரம்பட்டு கிராமத்தில் ஷேர் ஆட்டோவில் சென்ற 7 பெண்கள் மீது தனியார் பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 6 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரியதர்ஷினி மற்றும் பூங்குழலி ஆகிய இருவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ மீது பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி