ராணிப்பேட்டை அருகே பனை மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி

1பார்த்தது
ராணிப்பேட்டை அருகே பனை மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் போளிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட நெரிஞ்சந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரன், நேற்று பனை மரம் ஏறும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி