ராணிப்பேட்டை ரெட்டிவலம் அருகே நேற்று மாலை (நவ. 7) அரக்கோணம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைப்பிடித்து, கண்டக்டர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அரசு பேருந்து நெமிலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.