சென்னை, புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ரவுடி கருக்கா வினோத்தை சிறைக்காவலர்கள் நேற்று சோதனை செய்துள்ளனர். அப்போது ரவுடி கருக்கா வினோத் தன்னை சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரகளை செய்துள்ளான். அப்போது துணை ஜெயலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.