ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உட்கோட்டங்களுக்கு இரண்டு அவசர உதவி காவல் வாகனங்களை கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனங்கள் 100 கண்ட்ரோல் ரூம் அழைப்புகள் மற்றும் முக்கிய பிரச்சனைகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் என அவர் தெரிவித்தார். இது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.