தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிப்ரவரி 9 ராணிப்பேட்டையில், வாலாஜாபேட்டைக்கு அருகில் உள்ள பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில், டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை திறந்து வைக்கிறார். இந்த விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 9000 கோடி முதலீட்டில் 470 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையின் மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும்.