ராணிப்பேட்டை: போக்ஸோ வழக்கு.. ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை

743பார்த்தது
ராணிப்பேட்டை: போக்ஸோ வழக்கு.. ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை
ராணிப்பேட்டை சீக்கராஜபுரத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் முரளி கிருஷ்ணன் (56) வேலூர் திருவலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 13 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். போக்ஸோ சட்டத்தின் கீழ் 2022 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி ராதாகிருஷ்ணன் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ. 15,000 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி