ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு ஊராட்சி, ரபி நகர் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். இருள் சூழ்ந்திருப்பதால் குற்றச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். உடனடியாக இப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.