ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணிகள் முடிந்து திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் சாலையில் பழுது பார்க்கும் பணி நடைபெறுவதால் மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்லும்போது கனரக வாகனங்கள் சிக்கி போக்குவரத்து பாதிப்பு தினமும் ஏற்படுகிறது.