திமுக பொதுச்செயலாளரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன் (87) கால் வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று (பிப்ரவரி 11) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, வலி நிவாரண மருந்துகள் பரிந்துரைத்து, சில நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அவர், இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.