ராணிப்பேட்டையில் உள்ள ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்ற முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை வடக்கு எம்.பி. கலாநிதி வீராசாமி மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் பங்கேற்றனர். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் இக்கூட்டத்தில் பெறப்பட்டன. திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.