ராணிப்பேட்டை மாவட்டம் பெருமூச்சி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவருக்கு சொந்தமான பசுமாடு, பிப். 11 அன்று பாம்பு கடித்து உயிரிழந்தது. இது குறித்து அரக்கோணம் வருவாய் மற்றும் கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பாம்பு கடித்து பசுமாடு இறந்ததா என பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தினர்.