ராணிப்பேட்டை மாவட்டம் செம்பேடு கிராமத்தில் ராணி என்பவருக்குச் சொந்தமான பசுமாடு, நேற்று மாலை பெய்த பலத்த இடி மின்னலுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரக்கோணம் வருவாய்த்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.