ராணிப்பேட்டை: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

73பார்த்தது
ராணிப்பேட்டை: மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
ராணிப்பேட்டையை அடுத்த சீக்கராஜபுரம் தென்றல் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பூசாமி (வயது 68). பெல் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அரிசி மாவு அரைப்பதற்காக அண்ணாநகரில் உள்ள ரைஸ் மில்லுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் இவர் மீது மோதியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி