சோளிங்கர் அருகே மின் கசிவால் வீட்டில் தீ விபத்து

867பார்த்தது
சோளிங்கர் அருகே மின் கசிவால் வீட்டில் தீ விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் சின்ன தெருவில் வசிக்கும் சாந்தி (58) என்பவரது வீட்டில் நேற்று மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொலைக்காட்சி மற்றும் பிற மின்சாதனப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சோளிங்கர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி