ராணிப்பேட்டை மாவட்டம் அம்மனூர் சிப்காட் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் நேற்று (பிப். 16) சென்னை தனியார் வங்கியில் பணியாற்றும் கஜபதி (41) என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அரக்கோணம் டவுன் போலீசார் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.