வேலூர் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து

340பார்த்தது
வேலூர் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து
சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற மினி வேன், வேலூர் அடுத்த கருகம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (மே 23) ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.