ராணிப்பேட்டையில் எஸ்பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!

971பார்த்தது
ராணிப்பேட்டையில் எஸ்பி தலைமையில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி அய்மன் ஜமால் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொலை, கொள்ளை, போக்சோ வழக்குகளில் எதிரிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தரவும், பிடிகட்டளை நிலுவையில் உள்ளவர்களைக் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டது. மேலும், கஞ்சா, குட்கா, கள்ளச்சந்தை மதுபானம், மணல் கடத்தல், லாட்டரி விற்பனையை முற்றிலும் ஒழிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி