வேலூர் சலவன்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக தனியார் நிறுவன செல்போன் டவர் அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று (ஜன. 09) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.