வேலூர் அகரம்சேரி பகுதியில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இக்கூட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.பி சிவராமன், தவெக நிர்வாகிகளிடம் மைதானத்தில் பந்தல் அமைக்காதது குறித்து கேட்டதற்கு மதியம் 12-1 மணிக்குள் நிகழ்வு முடிந்துவிடும் என்பதால் பந்தல் அமைக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழு அமைக்கப்படும் என்று தவெகவினர் பதிலளித்துள்ளனர்.