ராணிப்பேட்டையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200 காலி பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் நேரில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9488466468 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.