நெமிலி அருகே நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு!

0பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுணமல்லி ஊராட்சிக்குட்பட்ட சம்பத்துராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஊர் புற நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை சமூகவிரோதிகள் அடித்து நொறுக்கினர். இது குறித்து அப்பகுதி மக்கள் நெமிலி ஒன்றிய குழு தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், இன்று (ஜனவரி 10)ஆம் தேதி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு நூலகத்தை பார்வையிட்டு, உடைந்த ஜன்னல் கண்ணாடிகளை மாற்றித் தருவதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி