வேலூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

1154பார்த்தது
வேலூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
வேலூரில், தந்தை இறந்த சோகத்தில் மன உளைச்சலுக்கு ஆளான ஐஸ்வர்யா (23) என்ற இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிளஸ்-2 படித்துவிட்டு டீக்கடையில் கேஷியராக வேலை செய்து வந்த ஐஸ்வர்யா, தந்தையின் மறைவால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த துயரச் சம்பவம் குறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.