
ராணிப்பேட்டையில் திமுக தேர்தல் பணிக்குழு ஆய்வு கூட்டம்!
ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு திமுக வடக்கு மண்டலம் தேர்தல் பணிக்குழுவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் மற்றும் பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்து கொண்டு SIR திட்டத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
































