
திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவு: 41 பேர் சிகிச்சை முடிந்து திரும்பினர்
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் கடந்த 21ம் தேதி அமோனியா வாயு கசிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் பெண் ஊழியர்கள் உட்பட 83 பேர் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 16 பெண்கள் உயிரிழந்தனர். 41 பேர் சிகிச்சை முடிந்து பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 26 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.



































