ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 456 நபர்கள் விடுவிப்பு

51பார்த்தது
ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 456 நபர்கள் விடுவிப்பு
திருப்பத்தூரில் தடையை மீறி கண்டன ஆர்பாட்டம், முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உட்பட 456 அதிமுகவினர் விடுவிப்பு. 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இன்று விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட 1000த்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் தடையை மீறி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி உட்பட 456அதிமுகவினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். இதனையடுத்து தற்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி