திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அதிமுக மாநில மருத்துவர் அணியைச் சேர்ந்த பசுபதி புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மே 21) அறிவித்தார். புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்க வாணியம்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்த பசுபதிக்கு, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.