திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் சார்பாக 50க்கும் மேற்பட்ட பார்வையற்றோர், வேலைவாய்ப்பு உரிமங்களைப் பறிக்கும் அரசாணை எண் 24-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும், ரத்து செய்யப்பட்ட அரசாணைகள் 20 மற்றும் 151-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆளும் அரசு தங்களுக்கு செய்த கொடுமைகள் ஏராளம் என்றும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.