திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு கடந்த 25 ஆம் தேதி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் மீண்டும் நீதிமன்றத்தில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் வந்துள்ளது. உடனடியாக நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு புரளி என கண்டறியப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.