பொதுமக்களின் பல நாள் கோரிக்கையை ஏற்று திரும்பவும் திருப்பத்தூர் மீனாட்சி நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் ஏற்படுத்திய கலெக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மீனாட்சி திரையரங்கம் அருகே பல வருடங்களாக பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் பேருந்து நிறுத்தத்தை தடை செய்தனர்.
இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். மேலும் இந்த பேருந்து நிலையத்தில் மட்டும் சுமார் ஒரு நாளைக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். பேருந்து நிறுத்தம் தடை ஏற்பட்ட காரணத்தால் திரும்பவும் அதே இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோர் பேருந்து நிறுத்தம் அமைக்க சரியான இடமா என்றும் அதே இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் ஆய்வுக்குப் பின்னர் இன்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அதே இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்க வழிவகை செய்தார்.