வேலூர் பாலாற்றில் குப்பைகள் அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்!

122பார்த்தது
வேலூர் பாலாற்றில் குப்பைகள் அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்!
வேலூரில் பாலாற்றில் நடந்த மயான கொள்ளை திருவிழாவில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த குடிநீர், குளிர்பான பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், மக்காச்சோள கதிர்கள் போன்றவற்றை பாலாற்றில் வீசிவிட்டு சென்றனர். இதனால் பாலாறு முழுவதும் குப்பைகள் சிதறி கிடந்தன. இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் பாலாற்றிற்கு வந்து குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி