திருப்பத்தூர் அருகே கணவனுக்கு அடி, உதை

987பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ஓடங்கிலிவட்டம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும், அவரது உறவினர் இந்துமதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சக்திவேல் துபாய் சென்று ஊர் திரும்பியபோது, தனது மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து நேற்று முன்தினம் (23) இந்துமதியின் பெற்றோரிடம் கூறியபோது, அவர்கள் சக்திவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி