திருப்பத்தூர்: பணத்துக்காக பெண் சிசுக்களை அழித்த மருத்துவர் (VIDEO)

1180பார்த்தது
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 8 கர்ப்பிணிப் பெண்கள், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய திருப்பத்தூர் மாவட்டம் பரதேசிப்பட்டிக்கு ஸ்கேன் செய்ய வந்துள்ளனர். இடம் தெரியாமல் நடுவழியில் நின்ற அவர்களைக் கண்ட பொதுமக்கள், கந்திலி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாலின சோதனையே இதன் நோக்கம் எனத் தெரியவந்தது. மருத்துவ இணை இயக்குநரின் புகாரின் பேரில், புரோக்கர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த ஸ்கேன் செய்த மருத்துவர் சுகுமாரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.