திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தனது 75வது ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் விதமாக, டிசம்பர் 25ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு தலா ரூ. 6 லட்சம் முதல் பரிசுடன் கபடிப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியில் புரோ கபடி போல சிறந்த 16 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சர், துணை முதல்வர், திரைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் வந்து கண்டு களிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.