வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த 69 வயதான நடராஜ், நேற்று சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது, உதவி செய்வது போல் நடித்த வாலிபர் ஒருவர் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றியுள்ளார். அந்த வாலிபர் சென்ற 5 நிமிடத்தில் நடராஜின் கணக்கில் இருந்து ரூ. 20,800 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.