வேலூர் மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மேட்டூர் நீரேற்று நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், அடுத்த 3 நாட்களுக்கு 50% குடிநீர் மட்டுமே விநியோகிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த 3 நாட்களுக்கு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.