அணைக்கட்டு அருகே நாய் கடித்து ஒருவர் பலி

578பார்த்தது
அணைக்கட்டு அருகே நாய் கடித்து ஒருவர் பலி
வேலூர் மாவட்டம், பிச்சாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (45) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்ததால் ஊசி போட்டுக்கொண்டார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. அணைக்கட்டு அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன், இன்று (நவ.22) உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி