தமிழக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்குரிய சட்டபூர்வமான பணப்பலன்கள், பணி மேம்பாடு மற்றும் கல்வி ஊக்கத்தொகைகள் வழங்கப்படாததை எதிர்த்தும், தமிழகம் தழுவிய அளவில் இன்று காலை அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வகையில் வாயில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பெருமளவில் பங்கேற்று, தங்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தினர்.