ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த வெள்ளி நகை மொத்த வியாபாரி தீபக், தனது நண்பர்களுடன் 70 கிலோ வெள்ளி நகைகளை வாணியம்பாடிக்கு கொண்டு சென்றார். நகைகளை வினியோகித்த பிறகு, மீதமிருந்தவற்றை காரில் வைக்கும்போது, 4 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் அவற்றை பறித்துச் சென்றது. வாணியம்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்கடை உரிமையாளர்களின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டு, 38.5 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.