திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் இன்று (மே-05) மாலை 4 மணி அளவில் எதிர்பாராத விதமாக மரம் சாய்ந்து விழுந்ததில் வாகன ஓட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், திருப்பத்தூர் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.