திருப்பத்தூர்: சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

5பார்த்தது
திருப்பத்தூர்: சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பழைய சோலூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் நரேஷ், தனது வீட்டில் வளர்த்து வரும் பசு மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்சார கம்பியை பசு மிதித்தபோது, அதை காப்பாற்ற முயன்ற நரேஷ் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று முதல் 12 ஆம் வகுப்பில் சேரவிருந்த நரேஷின் இந்த மரணம் சோலூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி