திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிவசௌந்தரவல்லி, மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு பதிலாக கரூர் ஆட்சியராக இருந்த ரவிக்குமார் என்பவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதிய ஆட்சியர், அடுத்த வாரத்திக்குள் திருப்பத்தூர் ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.