திருப்பத்தூர் மாவட்டத்தில், சதாம் உசேன் (30) என்ற வாலிபர், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று பெண் காவலரிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி, தனது செல்போனில் ஆபாச படங்களை காண்பித்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த பெண் காவலரின் கூச்சலைக் கேட்டு ஓடிவந்த போலீசாரைக் கண்டதும் வாலிபர் தப்பி ஓடினார். பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சதாம் உசேனைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.