மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் விபத்து!

234பார்த்தது
மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் விபத்து!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற பைக் ஒன்று மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி எதிரே விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பைக்கை ஓட்டி வந்த நபரை, அப்பகுதி பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி