வேலூர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!

1150பார்த்தது
வேலூர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்!
தமிழக அரசு நேற்று 30 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரகலா ஐஏஎஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரியா ஐஏஎஸ் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பி.எஸ். லீலா அலெக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த வே. இரா. சுப்புலட்சுமி, தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (Chief Operating Officer) நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி