வேலூர் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றியங்களில் அதிகாரிகளுக்கு இடமாற்றம் செய்து அறிவித்துள்ளார். இதன்படி, வேலூர் ஊராட்சி ஒன்றிய தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (பொது) பணிபுரிந்த ஜெயலட்சுமி அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சென்னை தலைமை செயலகத்தில் மனிதவள மேலாண்மைத்துறை உதவி பிரிவு அலுவலராக பணியாற்றிய ஜெயசந்திரன் காட்பாடி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணிபுரிந்த ஷாபீர் கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றிய ஜெயமாலினி வேலூர் ஊராட்சி ஒன்றிய தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.